2022 FIFA உலகக்கிண்ணம்

 2022 FIFA உலகக் கிண்ணம்


 


FIFA 2022 உலகக்கிண்ணக்காற்பந்தாட்டப் போட்டிகள் முடிவடைந்து விட்டன. கட்டார் தனது நாட்டை உலகம் திரும்பிப் பார்க்க வைத்து விட்டது.

 நவீன விமான நிலையம், புகையிரதங்கள் , வீதி அமைப்புக்கள் என்று பல்லாயிரக்கணக்கான உல்லாசப் பிரயாணிகளை வரவேற்க ஆயத்தம் செய்து விட்டது. இஸ்லாத்தையும் அறபிய கலாசாரத்தையும் பற்றி மிகவும் கேவலமாகச் சித்தரித்த மேற்குலக ஊடகங்களின் அனைத்துப் பிரச்சாரங்களும் பொய்யானவை என்று நிரூபிக்கப்பட்டு விட்டன.

 பலஸ்தீனக் கொடி உயரப் பறந்தது. இஸ்ரவேலை யாரும் கண்டு கொள்ளவில்லை. உதைபந்தாட்டப் போட்டியின் ஓரணி தோற்றுவிட்டால் தோற்ற நாட்டில் வாகனங்களை எரித்தும் கடைகளை உடைத்தும் ஆர்ப்பாட்டம் பண்ணும் கலாசாரம் மாறித் தோல்வியிலும் இறைவனை வணங்கிப் பணியும் கலாசாரத்தை மொறோக்கோ அணி காட்டியது.

 சிறந்த மார்க்க அறிஞர்கள் இஸ்லாத்தைப் போதித்தார்கள். பல காரீக்கள்  மிகவும் இனிமையாகக் குர்ஆன் வசனங்களை ஓதினார்கள். பலர் இஸ்லாத்தைத் தழுவினார்கள். கட்டார் நாடு செலவழித்த பணம் வீண் போகவில்லை. கட்டார் அமீர் அவர்களுக்கும் இதற்காக உழைத்த அனைவருக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக. 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url